வெல்டிங் மிஷின்திருடியவர் கைது
சேலம்:சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 48. கட்டுமான தொழில் செய்யும் இவர், அதே பகுதியில் வசிக்கும் சையத் என்பவருக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளாார். இந்நிலையில் கட்டுமான பணிக்கு பயன்படுத்தும், 'வெல்டிங் மிஷின்', கடந்த,௨௮ல் காணாமல் போனது. அதன் மதிப்பு, 10,000 ரூபாய். இதுகுறித்து, சுரேஷ் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், சன்னியாசிகுண்டை சேர்ந்த கவின்குமார், 21, திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், மிஷினை மீட்டனர்.