உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி

துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி

சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், தாட்கோவில் பதிவு செய்து, நலத்-திட்ட உதவிகளை பெறலாம். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், கழிவறை சுத்தம் செய்தல், சாக்கடை துார்வாருதல், கழிவு நீர் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநக-ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் மற்றும் மருத்துவமனைகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனை-வரும், தாட்கோவில் பதிவு செய்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பெறலாம். ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ