உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்

58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்

வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியம் சார்பில், அதன் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், 500க்கும் மேற்பட்டோர், கோரிக்கை மனுக்களை வழங்கினர்.அதில் அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வீரபாண்டி ஒன்றியத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. 104 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.முன்னதாக அமைச்சர், பொது சுகாதாரம், வேளாண்மை அரங்குகள், கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் பணியை பார்வையிட்டார். பின் பல்வேறு துறைகள் சார்பில், 58 பயனாளிகளுக்கு, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, டி.ஆர்.ஓ., மேனகா, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், ஒன்றிய கமிஷனர் சந்திரமலர், பி.டி.ஓ., தனபால்(கி.ஊ.,) உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மகளிர் குழுக்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மனுக்களை பெற்றார். கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி