உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ தொடக்கம்

வீல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ தொடக்கம்

சேலம் :வர்ஷம் ஈவன்ட்ஸ் அண்ட் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' இணைந்து, சேலம், 5 ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், 'வீல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ - 2025' பெயரில், இரு நாட்கள் கண்காட்சியை நடத்துகின்றன. முதல்நாளான நேற்று, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.இதில், 'ஆடி, பி.எம்.டபிள்யூ., ஸ்கோடா, கியா' உள்பட அனைத்து பிராண்ட் கார் நிறுவனங்கள், இருசக்கர வாகன நிறுவனங்கள், 'ஸ்டால்கள்' அமைத்துள்ளன. ஜி.எஸ்.டி., மாற்றத்துக்கு பின், கார் விலை நிலவரம் குறித்து, கண்காட்சியில் பங்கேற்றவர்கள் கேட்டு தெரிந்துகொண்டனர். இலவச அனுமதி என்பதால், அனைவரும் பயன்பெற, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.முன்னதாக தொடக்க விழாவில், ஏ.வி.எஸ்., - சக்தி கைலாஷ் கல்வி நிறுவன செயலர் ராஜவிநாயகம், யு - டியூபரான, திருப்பூரை சேர்ந்த மோகன், 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' இணை துணைத்தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ