மேலும் செய்திகள்
'குடி'மகன்கள் தொல்லை; போலீசார் கண்காணிக்கணும்
12-Jun-2025
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி - ராசிபுரம் சாலையில், பனமரத்துப்பட்டி ஏரியின் உபரிநீர் செல்லும் ஓடை உள்ளது. அதன் அருகே சாலை-யோரம், நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவர் கட்டி உள்-ளனர்.அதில் எந்த நேரமும், 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்தி வரு-கின்றனர். காலி பாட்டில்களை, அருகே உள்ள விவசாய வயலில் வீசுகின்றனர். அங்கு பணிபுரியும் பெண்கள், உடைந்த கண்ணாடி குத்தி, சிரமத்துக்கு ஆளாகின்றனர்.நள்ளிரவிலும், 'குடி' மகன்கள் கும்மாளம் போடுவதால், அந்த வழியே செல்லவே, மக்கள் அச்சப் படுகின்றனர். ஆனால் அந்த இடம், மல்லுார், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது.இருப்பினும் கடைகோடியை சேர்ந்த, இரு ஸ்டேஷன் போலீ-சாரும் எட்டிப்பார்ப்பதில்லை. அதனால், 'குடி'மகன்களின் ஆட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எந்த ஸ்டேஷன் போலீசார் வந்து அடக்குவர் என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.'பார்' ஆன ஏரிக்கரைஅதேபோல் காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வழி பெத்தேல் பிரிவு சாலை அருகே கோட்டை குள்ளமுடையான் ஏரி உள்ளது. அதன் அருகே பல ஏக்கரில் விவசாய தோட்டங்கள் உள்-ளன. ஆனால் சில மாதங்களாக ஏரிக்கரையில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, பலர் மது அருந்தி வருகின்றனர். பகலில் திறந்த வெளி பாராகவே மாறிவிட்டது. கரையில் மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. தீவட்டிப்பட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
12-Jun-2025