உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடி, மின்னலுடன் பரவலாக மழை

இடி, மின்னலுடன் பரவலாக மழை

பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு, 7:30 மணிக்கு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, 45 நிமிடம் கொட்டி தீர்த்தது. வயல்களில் தண்ணீர் தேங்கி-யது. அரளி, நிலக்கடலை சாகுபடிக்கு மழை சாத-கமாக அமைந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், அத்தனுார்-பட்டி, பேளூர், குறிச்சி, துக்கியாம்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.தாரமங்கலத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால் வெயிலில் சிரமப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.அதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதி-களில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ