மனைவி மாயம்; கணவர் புகார்
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 30. இவரது மனைவி பிரின்ஸிகேத்ரின், 23. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற பிரின்ஸி கேத்ரின், மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. எங்கு தேடியும் காணாததால், விஸ்வநாதன் புகார்படி கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர்.