உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு தமிழக அரசு கருணை காட்டுமா

இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு தமிழக அரசு கருணை காட்டுமா

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 1995 இ.பி.எப்., பென்ஷனர்கள் நல சங்க மண்டல தலைவர் சண்முகம் தலைமையில், நேற்று நிர்வாகிகள், உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை மனு விபரம்:தமிழகத்தில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், மிக குறைந்த தொகையை பென்ஷனாக பெறும் மூத்த குடிமக்கள், 10 லட்சம் பேர் உள்ளோம். எங்களுக்கு, அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரை மட்டுமே பென்ஷனாக கிடைக்கிறது. புதுவை உட்பட ஆந்திரா, கேரளா, ஹரியானா மாநிலங்களில் மிக குறைந்த பென்ஷன் பெறும் மூத்த குடிமக்களுக்கு, மாதந்தோறும் கூடுதல் உதவித்தொகையாக, 4,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல, தமிழக அரசும், முதியோர் சமூகநல பாதுகாப்பு நிதியில் இருந்து உதவித்தொகையாக மாதம், 4,500 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், எங்களின் வயதுமூப்பை கருத்தில் கொண்டு, கோரிக்கை மனுவை கருணையுடன் பரிசீலனை செய்து, உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை