உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குக்கர் வெடித்து பெண் தீக்காயம்

குக்கர் வெடித்து பெண் தீக்காயம்

குக்கர் வெடித்து பெண் தீக்காயம்மேட்டூர், டிச. 10-கொளத்துார் ஒன்றியம், சாம்பள்ளி ஊராட்சி, கோம்பைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி, 43. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் காஸ் அடுப்பில் குக்கரில் அரிசி வைத்து விட்டு, கிரைண்டரில் மாவு ஆட்டி கொண்டிருந்தார். அப்போது, திடீரென குக்கர் வெடித்து சிதறி அடுப்பு தீப்பற்றி எரிந்ததுடன், குடிசை வீடும் தீப்பிடித்தது. விபத்தில் சாந்திக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் போலீசார் கூறுகையில்,' குக்கர் வெடித்தவுடன், காஸ் சிலிண்டரும் வெடித்து உடலில் காயம் ஏற்பட்டதாக சாந்தி கூறினார். சம்பவ இடத்தில் நவப்பட்டி வி.ஏ.ஓ., விசாரணைக்கு பின்பு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ