மொபட்டில் இருந்து விழுந்த பெண் சாவு
மொபட்டில் இருந்துவிழுந்த பெண் சாவுஆத்துார், நவ. 27-ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, 55. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 20ல், 'ஸ்கூட்டி'யில் பைத்துார் சென்றுகொண்டிருந்தார். பைத்துார் சாலையில் சென்றபோது, மொபட்டில் இருந்து தடுமாறி விழுந்ததில் ஜெயலட்சுமி படுகாயமடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.