உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மிளகு பறித்தபோது தவறி விழுந்த பெண் சாவு

மிளகு பறித்தபோது தவறி விழுந்த பெண் சாவு

ஏற்காடு, ஏற்காடு, வெள்ளக்கடை, பெரியேரிக்காட்டை சேர்ந்த காரியராமன் மனைவி பாப்பா, 37. மஞ்சக்குட்டையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த மே, 23 அன்று, சவுக்கு மரத்தில் ஏறி அதில் படர்ந்துள்ள கொடியில் மிளகு பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ