உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் பெண் மாயம்

ரயிலில் பெண் மாயம்

சேலம், திருப்பத்துார் மாவட்டம் காட்டேரி, அம்மையப்பன் நகரை சேர்ந்த செந்திலின் இளைய மகள், திருப்பூரில் பணிபுரிகிறார். மூத்த மகள் நந்தினி, 19. இவரையும் திருப்பூரில் வேலையில் சேர்க்க, தாய் பத்மா, பாட்டி தேவயானி ஆகியோர் அழைத்துக்கொண்டு, கடந்த, 21ல், பாட்னா - எர்ணாகுளம் ரயிலில் புறப்பட்டனர்.சேலம் நோக்கி வந்தபோது, நந்தினி, சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிச்சென்றவர், திரும்பி வரவில்லை.சேலத்தை கடந்த நிலையில், அருகில் இருந்தவர்களிடம், பெண்ணின் அடையாளத்தை கூறி விசாரித்த போது, அவர் சேலம் சந்திப்பில் இறங்கிச்சென்றது தெரிந்தது.அதற்குள் ரயில், ஈரோட்டை அடைந்து விட்டதால், அங்கிருந்து மற்றொரு ரயிலில் சேலம் வந்த தாய், பாட்டி ஆகியோர், எங்கு தேடியும் நந்தினியை காணவில்லை. இதுபற்றி அவர்கள் புகார்படி, சேலம் ரயில்வே போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை