உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய பெண்

சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய பெண்

கெங்கவல்லி: நிலம் பத்திர பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக, விவசாய முன்-னேற்ற கழக மாநில மகளிர் அணி செயலாளர், கெங்கவல்லி சார்-பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலை, சின்னகரட்டூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி கமலம், 43. இவர், விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலராக உள்ளார். இவர் நேற்று மாலை, 4:30 மணியளவில் கெங்கவல்லி சார்பதிவாளர் அலுவலகம் சென்று, கூட்டு பட்-டாவில் உள்ள இடத்தை பத்திர பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவற்றை சரிசெய்ய வேண்டும் என, கூறியுள்ளார். சார்பதிவாளர் ராஜேந்திரன், நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த கமலம், மூல பத்திரம் இல்லாமல் பத்திரம் பதிவு செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். பின், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கெங்கவல்லி போலீசார், கமலத்திடம் பேச்சு-வார்த்தை நடத்தினர். அதன்பின், 5:30 மணியளவில் அவர் அங்கி-ருந்து சென்றார்.இதுகுறித்து கமலம் கூறுகையில், ''கூட்டு பட்டாவில் உள்ள நிலத்தை, மூலபத்திரம் எனும் தாய் பத்திரத்தை ஆய்வு செய்-யாமல், கிரயம் மற்றும் பத்திர பதிவு செய்துள்ளனர். 2010 முதல் இது தொடர்பாக மனு அளித்து வருகிறேன். டி.ஆர்.ஓ., மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தேன். சார்பதி-வாளர் அலுவலகத்தில் முறையிடும்படி கூறியதால், இன்று (நேற்று), சார்பதிவாளரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமான பதில் அளித்ததால், 1988 மற்றும் 2001ல் பதிவு செய்த பத்திர பதிவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டம் நடத்தினேன்,'' என்றார்.இதுகுறித்து, கெங்கவல்லி சார்பதிவாளர் ராஜேந்திரன் கூறு-கையில்,'' கூடமலை கமலம் கேட்கப்பட்ட ஆவணங்கள், ஏற்க-னவே வழங்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் அரசு பணி செய்யவிடாமல், ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தது தொடர்பாக, 'சிசிடிவி'யில் பதிவான வீடியோ காட்சிகளுடன், கெங்கவல்லி போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை