உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனிப்பொழிவால் மாலையில் அரளி மொக்கு பறிக்கும் பெண்கள்

பனிப்பொழிவால் மாலையில் அரளி மொக்கு பறிக்கும் பெண்கள்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை, 3:00 முதல், 8:00 மணி வரை, செடிகளில் இருந்து அரளி மொக்கு பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் சில நாட்களாக ஜருகுமலை, போதமலை, கிடமலை அடிவாரம், தும்பல்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு உள்ளது. சாரல் மழையும் அடிக்கடி பெய்வதால் குளிர் காற்று வீசுகிறது.இதனால் அதிகாலையில் அரளி மொக்கு பறிக்க செல்லவே தொழிலாளர்கள் தயங்குகின்றனர். நடுங்கும் குளிர், உறைய வைக்கும் பனியால், மூதாட்டிகள், சளி, இருமல், தலைபாரம், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில பெண்கள், அதிகாலையில் மொக்கு பறிப்பதை தவிர்க்க, அதற்கு முந்தைய நாள் மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, மொக்கு பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை