உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ்சை சிறைபிடித்து மகளிர் குழு சாலை மறியல்

அரசு பஸ்சை சிறைபிடித்து மகளிர் குழு சாலை மறியல்

தலைவாசல், தலைவாசல், சாத்தப்பாடியை சேர்ந்தவர்கள் இந்திராணி, அஞ்சலை. இவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளனர்.இவர்கள் வங்கி கணக்கில் கடன் பெற்றதாகவும், அத்தொகை திரும்ப செலுத்தப்படாததால், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரக வேலை திட்ட கூலி, மகளிர் உரிமைத்தொகை ஆகியவற்றை பெற முடியாத ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலகம், வங்கி, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, நேற்று, மகளிர் குழுவை சேர்ந்த, 10 பெண்கள், சாத்தப்பாடி பஸ் ஸ்டாப்பில், அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.கெங்கவல்லி போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை