பெண்கள் கபடி போட்டி: அந்தியூர் அணி வெற்றி
மேட்டூர்: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பிறந்தநாளையொட்டி, சேலம் மேற்கு மாவட்டம் கொளத்துார் வடக்கு ஒன்றியம் சார்பில் மகளிருக்கு மாநில கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. காவேரிபுரம் ஊராட்சி, சத்யா நகரில் நடந்த போட்டியில், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றன.மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தொடங்கிவைத்தார். நேற்று, சேலம் மாவட்டம் வனவாசி - ஈரோடு மாவட்டம் அந்தியூர் அணியினர் மோதினர். அதில் அந்தியூர் வெற்றி பெற்றது. தொடர்ந்து மற்ற அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 30,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு, 20,000, மூன்று, நான்காம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா, 10,000 ரூபாய் வழப்படும் என, சத்யா நகர், சரஸ்வதி நகர் பா.ம.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.