உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜருகுமலையில் மண் சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம்

ஜருகுமலையில் மண் சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஜருகுமலை, கடல் மட்டத்தில் இருந்து, 2,000 மீ., உய-ரத்தில் உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதனால் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், கீழுர் கிராமத்தில் சாலை அமைக்கப்படுகிறது. அச்சாலையில் மண் சரிவை தடுக்க, தடுப்புச்சுவர் கட்ட, பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட ஊராட்சி நிதி, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 120 மீ., நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அப்பணியை, ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், தனி அலுவலர் கார்த்தி, நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ