மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவி மாயம்
11-Jun-2025
சேலம், சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி அரசு பள்ளியில், 9 வது படித்து வருகிறார். சிறுமியின் தந்தையும், பெரிய வீராணத்தை சேர்ந்த பிரகாஷ், 44, என்பவரும் மரம் அறுக்கும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரகாஷ், சிறுமி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியின் மொபைல் எண்ணை பெற்றுக்கொண்ட அவர், சிறுமியை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உனது தந்தையை கொன்று விடுவேன் என, மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து, சிறுமியின் பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர், இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று பிரகாைஷ கைது செய்தனர்.
11-Jun-2025