மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
12-Apr-2025
சேலம், சேலம், அம்மாபேட்டையில், நேற்று காலை 6:20 மணிக்கு, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ரயிலில் அடிபட்ட அவர் உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி அர்ஜூனன், இயற்கை உபாதைக்கு சென்றபோது ரயிலில் அடிபட்டு பலியானது தெரிந்தது.
12-Apr-2025