மேலும் செய்திகள்
மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி
23-Sep-2025
மேட்டூர்: பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தொழிலாளி பலியானார்.கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தபாடி பெருமாள் மகன் தொழிலாளி கோவிந்தராஜ், 44. நேற்று இரவு, 7:00 மணியளவில் கோவிந்தராஜ் தனது பைக்கில் கோவிந்தபாடி நோக்கி சென்றார். அப்போது சத்யாநகர் பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த மற்றொரு பைக் கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கொளத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23-Sep-2025