உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

சேலம்: ஓமலுார், சங்கீதப்பட்டி வெற்றிலைக்காரனுாரை சேர்ந்தவர் குட்டியான், 35. தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், கடந்த, 7ல் வேலைக்கு சென்ற பின், வீடு திரும்பவில்லை, உறவினர்கள் தேடியும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை, கருப்பூர் ஈச்சாங்காட்டூரில் உள்ள ஏழுமலை விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். ஏழுமலை தகவல்படி, கருப்பூர் போலீசார் குட்டியான் உடலை கைப்பற்றினர். குளித்தபோது மூழ்கி இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ