மேலும் செய்திகள்
ஜவுளி கடையில் காதல் போலீசில் ஜோடி தஞ்சம்
18-Dec-2025
ஆத்துார்: கெங்கவல்லி அருகே கடம் பூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் லோகநாதன், 25. கூலித்தொழிலாளி. ஆத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகள் ஜனனி, 19. கெங்கவல்லியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் படிக்கிறார். இவர்கள், இரு ஆண்டாக காதலித்தனர். இதை அறிந்து இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெறறோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தி லோகநாதனுடன், ஜனனியை அனுப்பினர்.
18-Dec-2025