பள்ளி பஸ் மோதி தொழிலாளி பலி
பள்ளி பஸ் மோதி தொழிலாளி பலிகெங்கவல்லி, செப். 20-கெங்கவல்லி, தெடாவூர் புதுாரை சேர்ந்தவர் வடிவேல், 39. மேள தொழிலாளி. நேற்று ஆத்துாரில் இருந்து, 'ஹீரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இரவு, 7:30 மணிக்கு ஆணையாம்பட்டியில் சென்றபோது, தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. வடிவேல் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பஸ்சில் இருந்த இரு மாணவியர் கதறினர். மக்கள், மாணவியரின் பெற்றோரை வரவழைத்தனர். பின் மாணவியரை ஒப்படைத்தனர்.முதலில், இறந்தவர் குறித்து அடையாளம் தெரியாமல் இருந்ததால் கெங்கவல்லி ஸ்டேஷனுக்கு உடலை எடுத்துச்சென்று, உடற்கூராய்வுக்கு நடவடிக்கை எடுத்தனர். இதையறிந்த வடிவேலின் உறவினர்கள் வந்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.