தர்ம சாஸ்தா ஆலயத்தில் படி பூஜை
சேலம், டிச. 26-சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தர்ம சாஸ்தா ஆலயத்தில் மண்டல, மகர விளக்கு பூஜை நடந்து வருகிறது. தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்து வருகின்றன. அதன்படி மண்டல பூஜை முடியும் நிலையில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.அதிகாலை முதல் ஐயப்பனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. நெய் அபி ேஷகம் நடந்து, வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை நடந்தது. மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் சேலம் சாஸ்தா சேவா சமிதி சார்பில், 43ம் ஆண்டாக, சபரிமலை யாத்திரை செல்கின்றனர். இதனால் தர்ம சாஸ்தா ஆலயத்தில், சமிதியின் குருசாமி சீனிவாசன் தலைமையில், 18ம் படி பூஜை நடந்தது. ஒவ்வொரு படியிலும் விளக்கு, பட்டாடை அணிவிக்கப்பட்டு, நம்பூதிரி மேள தாளம் முழங்க, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மலர் அர்ச்சனை, 18ம் படிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், மக்கள் தரிசனம் செய்தனர். மூலவர் ஐயப்பனுக்கு பூஜை செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.