தை முதல் வெள்ளி அம்மனுக்கு பூஜை
சேலம்: தட்சிணாயனம், உத்தராயணம் தொடக்க மாதங்களான, ஆடி, தையில் வரும் வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு உகந்தது. அதன்படி தை முதல் வெள்ளியான நேற்று, சேலம் கோட்டை மாரியம்மனுக்கு, பால, இளநீர், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் குமாரசாமிப்பட்டி எல்லை பிடாரியம்மன், செவ்-வாய்ப்பேட்டை மாரியம்மன், காளியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், தேர் வீதி பெரியாண்டிச்சி உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அபி ேஷகம், பூஜை நடந்நது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.