மேலும் செய்திகள்
ரூ.67 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம்
14-Sep-2024
ரூ.54 லட்சத்துக்குமஞ்சள் வர்த்தகம்ஆத்துார், செப். 28-ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 54 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது.ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஆத்துார், தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள், 384 குவிண்டால் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஆத்துார், சேலம், ஈரோடு, திருச்சி பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். விரலி மஞ்சள் குவிண்டால், 13 ஆயிரத்து, 769 முதல், 16 ஆயிரத்து, 939 ரூபாய், உருண்டை ரக மஞ்சள் குவிண்டால், 12 ஆயிரத்து, 569 முதல், 14 ஆயிரத்து, 669 ரூபாய், பனங்காலி (தாய் மஞ்சள்) குவிண்டால், 11 ஆயிரத்து, 669 முதல், 17 ஆயிரத்து, 209 ரூபாய் விற்பனையானது. 384 குவிண்டால் மஞ்சள் மூட்டை, 54 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட விரலி ரகம் குவிண்டாலுக்கு, 284 ரூபாய் விலை குறைவாக இருந்தது. உருண்டை ரகம், 144 ரூபாய், பனங்காலி ரகம், 218 ரூபாய் விலை அதிகளவில் இருந்தது.
14-Sep-2024