உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணம் திருடிய வாலிபர் கைது

பணம் திருடிய வாலிபர் கைது

மேட்டூர், கொளத்துாரில் கோழிக்கறி கடையில் பணம் திருடி விட்டு பிடிக்க சென்ற உரிமையாளரை மிரட்டிய ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான தொழிலாளியை தேடி வருகின்றனர்.கொளத்துார், பண்ணவாடி சாலையை சேர்ந்தவர் கோழிக்கறி கடை உரிமையாளர் ரகு, 41. அருகிலுள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுதம், 25, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சூர்யா, 26. நேற்று காலை, 8:00 மணியளவில் ரகு கோழிக்கறி கடைக்கு சென்ற இருவரும், கல்லாபெட்டியில் இருந்த, 1,800 ரூபாயை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது பிடிக்க முயன்ற ரகுவை, கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். அருகில் இருந்த வியாபாரிகள், கவுதமை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருடிய பணத்தை பறிமுதல் செய்த கொளத்துார் போலீசார், தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ