உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் ரூ.1.93 லட்சம் திருடிய வாலிபர் கைது

வீட்டில் ரூ.1.93 லட்சம் திருடிய வாலிபர் கைது

சேலம், சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் பாரி, 26. புது பஸ் ஸ்டாண்ட் அருகே மொபைல் போன் விற்பனை கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பீரோவை உடைத்த மர்ம நபர்கள், 1.93 லட்சம் ரூபாயை திருடிச்சென்றனர். அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்ததில், சேலம் டவுனை சேர்ந்த ஹரிகுமார், 30, திருடியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !