உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் சிலிண்டர்்களை பதுக்கி விற்ற வாலிபர் சிக்கினார்

வீட்டில் சிலிண்டர்்களை பதுக்கி விற்ற வாலிபர் சிக்கினார்

சேலம், சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஜலகண்டாபுரத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூரப்பள்ளி, காட்டம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான சிலிண்டர்கள் இருந்தன. விசாரணையில், அந்த வீட்டில் வசிக்கும் பெருமாள், 41, என்பவர், மானிய விலையில் வாங்கும் மக்களிடம் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிந்தது. மேலும் மக்களுக்கு ஒரு கிலோ காஸ், 120 ரூபாய்க்கு விற்பதும், காஸ் நிரப்பும் இயந்திரத்தை பயன்படுத்தி கார்களுக்கு காஸ் நிரப்பி, பணம் சம்பாதிப்பதும் தெரிந்தது. இதையடுத்து, காஸ் நிரப்பிய சிலண்டர் - 29, காலி சிலிண்டர் - 14, காஸ் நிரப்பும் இரு இயந்திரங்களை பறிமுதல் செய்து, பெருமாளை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை