உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்டேட்டஸ் வைத்து வாலிபர் தற்கொலை

ஸ்டேட்டஸ் வைத்து வாலிபர் தற்கொலை

சேலம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் சபரீஷ்குமார், 29. இவர் சேலம், சிவதாபுரத்தில் உள்ள அவரது சகோதரி அனிதா வீட்டில் தங்கி, மாமாங்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று காலை, அலுவலகம் சென்ற அவர், திரும்பி வரவில்லை. இந்நிலையில், 'நான் மன உளைச்சலில், சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இருக்கிறேன்' என, வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா உள்ளிட்ட உறவினர்கள் ஓட்டலுக்கு சென்று பார்த்தபோது, அவர் துாக்கிட்டுக்கொண்டது தெரிந்தது. சூரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !