உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இளைஞர் தின விழா கொண்டாட்டம்

இளைஞர் தின விழா கொண்டாட்டம்

சேலம்: சேலம், அய்யந்திருமாளிகையில் உள்ள நேசக்கரங்கள் இல்-லத்தில் தேசிய இளைஞர் தினம், விவேகானந்தர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இல்ல தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். விவேகானந்தரின் படத்துக்கு, இல்ல குழந்-தைகள் மலர்துாவி மரியாதை செலுத்தினர். இல்ல செயலர் பெரி-யசாமி, கண்காணிப்பாளர் மதன், விவேகானந்தர் குறித்து பேசினர். தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இல்ல மேலாளர் துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர். மாலை அணிவிப்புசேலத்தில் மாநகர் பா.ஜ., சார்பில், ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு, நேற்று மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் கவுதம் தலைமையில், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்-டனர். மாநகர் தலைவர் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாவட்ட பார்வையாளர்கள் முருகேசன், அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி