உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

வாழப்பாடி: வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து அண்ணாநகரை சேர்ந்தவர் செங்கல் சூளை கூலி தொழிலாளி ராஜ்குமார், 36. இவர் நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு வாழப்பாடி பகுதியில் இருந்து பேளூர் செல்லும் நெடுஞ்சாலையில் அண்ணாநகர் அருகே, எக்ஸல் சூப்பர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாழப்பாடி நோக்கி எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம், மொபட் மீது மோதியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வாழப்பாடி போலீசார், ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை