உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை, 2:10 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத, 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகாயங்களுடன் கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பட்டி வி.ஏ.ஓ., விக்னேஷ் கொடுத்த புகார்படி, வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தது யார் என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி