உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் மோதி இளைஞர் பலி

பைக் மோதி இளைஞர் பலி

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இருப்பாளி காட்டுவளவை சேர்ந்த, பெரியண்ணன் மகன் லோகேஸ்வரன், 21. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு காய்கறி வாங்க, இடைப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜலகண்டாபுரத்தில் இருந்து இடைப்பாடி நோக்கி, 'பல்சர்' பைக்கில் வந்தவர், லோகேஸ்வரன் பைக் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். பூலாம்பட்டி போலீசார், 'பல்சர்' பைக் ஓட்டி வந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ