உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்

சேலம்: மொரப்பூர் - தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் காலை ஒருவர் விழுந்து கிடந்தார். லோகோ பைலட் தகவல்படி, சேலம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, தலையில் படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த வழியே வந்த ஒரு ரயிலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என, தெரிந்தது. நீல நிற ஜீன்ஸ் பேன்ட், மார்பில் இதய வடிவத்தை பச்சை குத்தி, ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனக்கூறிய போலீசார், அவரது விபரம் குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ