உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண்டல கிரிக்கெட்: சேலம், கோவை அணிகள் வெற்றி

மண்டல கிரிக்கெட்: சேலம், கோவை அணிகள் வெற்றி

வீரபாண்டி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவில், 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி, கடந்த, 22ல் தொடங்கியது. சேலம், இரும்பாலை மைதானத்திலும், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்திலும், போட்டிகள் நடக்கின்றன. சேலம், மயிலாடுதுறை, தர்மபுரி, கோவை அணிகள் விளையாடுகின்றன.இறுதி நாளான நேற்று, கல்லுாரி மைதானத்தில் சேலம் - மயிலா-டுதுறை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மயிலாடு-துறை அணி, 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்கள் மட்டும் எடுத்தன. அடுத்து ஆடிய சேலம் அணி, 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 107 ரன்களை எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 18 ரன்கள் மட்டும் கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சேலம் அணி வீரர் கரண் தனுஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இரும்பாலை மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் தர்ம-புரி - கோவை அணிகள் மோதின. முதலில் ஆடிய தர்மபுரி அணி, 29.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 120 ரன்கள் எடுத்தன. அடுத்து களமிறங்கிய கோவை அணி, 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 122 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 72 ரன்கள் எடுத்த கோவை அணி வீரர் ஹர்ஷவர்தன், ஆட்ட நாயகனாக தேர்வானார். இதன்மூலம் மண்டல அளவில் வெற்றி பெற்ற சேலம், கோவை அணிகள், அடுத்து மண்டலங்கள் இடையே நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ