உயிரியல் பூங்கா விரிவாக்கம் விரைவில் அனுமதி கிடைக்கும்
சேலம், சேலம், குரும்பப்பட்டி வன உயிரியில் பூங்கா, 75 ஏக்கரில், 21 வகை வன உயிரினங்கள் - 283 எண்ணிக்கையில் பராமரிக்கப்படுகின்றன. இதை நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்தி, 300 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு, 2021ல் அரசாணை வெளியிட்டு பணி நடக்கிறது. அதில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளை காட்சிப்படுத்த அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் மத்திய விலங்கு காட்சியக ஆணைய மதிப்பீட்டாளர் அன்வர் ஜமால் அகமது, கடந்த, 18 முதல், 20 வரை, குரும்பப்பட்டி பூங்காவை பார்வையிட்டார். அப்போது போதிய இட வசதி, சுற்றுச்சூழல், கூண்டுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:பூங்காவை தரம் உயர்த்த, இடம் உள்ளிட்ட போதிய வசதிகள் உள்ளதால், விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.