உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டிற்குள் மாடு நுழைந்த தகராறில் பெண் கொலை

வீட்டிற்குள் மாடு நுழைந்த தகராறில் பெண் கொலை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கோவானூரை சேர்ந்தவர் விவசாயி சந்திரன். இவரது மனைவி வள்ளி (42). இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அங்கம்மாளுக்கும் (60) இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு கிராமத்தை சேர்ந்த மாடு, வள்ளி வீட்டு வாசலில் நின்று தண்ணீர் குடித்தது. இதை பார்த்த அவர் மாட்டை விரட்டியுள்ளார். மாடு, அருகில் உள்ள அங்கம்மாள் வீட்டிற்குள் புகுந்தது.

இது குறித்து, வள்ளி மற்றும் அங்கம்மாள் மகள்கள் பாண்டிமீனாள், எழிலரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சகோதரிகள் இருவரும் கல்லைக்கொண்டு, வள்ளி மீது எறிந்தனர். இதில், வள்ளி நெஞ்சில் கல் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பலியானார். சிவகங்கை டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு எஸ்.ஐ., நீலமேகம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ