மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
சிவகங்கை:''பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்ய வேண்டும்,'' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சட்டசபை கல்வி மானியக் கோரிக்கையில், அரசு பள்ளிகளில் 5,790 பட்டதாரி, 4342 இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அமைச்சர் சி.வி.,சண்முகம் அறிவித்தார். ஆனால், ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்புபடியா அல்லது தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் தேர்வினை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்தால், முறைகேடுகளை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிக்கு வந்தவர்கள் மத்தியில், கல்வித்துறையில் சிறந்த, திறமையான ஆசிரியர்கள் வரவேண்டும் என்றால், கட்டாயம் தேர்வு வாரியம் மூலம் மட்டுமே ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர், புரவலர் பொன்ராஜ் கூறுகையில்,' அனைத்து பள்ளிகளிலும் செயற்கைகோள் முறையில் பாடம் கற்பிப்பது, செமஸ்டர் முறை கொண்டு வரும் தமிழக அரசை பாராட்டி, வரவேற்கிறோம். அதே நேரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்தால் மட்டுமே முறைகேடுகளை தவிர்க்கலாம்,' என்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago