உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓமனில் தமிழர்கள் தவிப்பு முதல்வர் "ஜெக்கு கண்ணீர் கடிதம்

ஓமனில் தமிழர்கள் தவிப்பு முதல்வர் "ஜெக்கு கண்ணீர் கடிதம்

சிவகங்கை: உணவு, சம்பளம் இன்றி ஓமனில் தவிக்கும் 18 பேரை காப்பாற்ற கோரி, முதல்வர் ஜெ.,க்கு உறவினர்கள் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் பேச்சாந்தங்குடியை சேர்ந்த ஆனந்தகுமார், மானாமதுரை சந்தனூர், காரைக்குடி ராமன், கோட்டாநத்தம் குமரன் மற்றும் திருச்சி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 18 பேர் ஓமன் நாட்டில் சலாலா என்ற ஊரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றனர். இவர்களை தேனியை சேர்ந்த அப்துல்காதர் கட்டட வேலைக்கு அனுப்பி வைத்தார். வேலைக்கு சேர்ந்த போது கூறிய சம்பளம், உணவு, குடிநீர், இருப்பிட வசதி செய்து தரவில்லை. இதனால், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்தனர். தூதர அதிகாரிகள், ஓமன் நாட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், அதிகாரிகள் முன்னிலையில் பேசி தீர்த்து கொள்ளும்படி அனுப்பி வைத்தனர். பேச்சுவார்த்தையில் வேலை செய்ய விருப்பம் இல்லாத பட்சத்தில், நிறுவனத்திற்கு நஷ்ட ஈடு வழங்கிவிட்டு, சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்து வந்தால் பாஸ்போர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சம்பளம், உணவு, தங்கும் வசதி இல்லாத நிலையில், வேலை செய்ய முடியாது, என உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். உறவினர் மலைச்சாமி கூறுகையில்,'' வேலைக்கு ஒப்பந்தம் செய்யும் போது பேசிய சம்பளம் தரவில்லை.கடந்த மூன்று மாதங்களாக சம்பளம், உணவு, குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தி கொண்டனர். இது குறித்து ஓமன் நாட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் மூலம் கேட்ட போது, 'இந்தியாவிற்கு திரும்பி செல்ல, ஒவ்வொருவரும் 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கினால், பாஸ்போர்ட் வழங்கப்படும், எனக்கூறி பறித்து வைத்து கொண்டனர். தமிழக முதல்வர் 'ஜெ' தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு கடிதம் எழுதியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை