உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனித வளமையத்தில் படித்தவர்களுக்கு பணி

மனித வளமையத்தில் படித்தவர்களுக்கு பணி

சிவகங்கை : சிவகங்கை மனித வளமைய இலவச பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற இருவருக்கு கூட்டுறவு துணை பதிவாளர் பதவி கிடைத்துள்ளதாக, மைய இயக்குனர் கற்பூரசுந்தரபாண்டியன் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: இம்மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்விற்காக பயிற்சிபெற்று 52 பேர் முதல்நிலை தேர்வு எழுதினர். அதில் 12 பேர் முதன்மை தேர்வினை எழுத தகுதி பெற்றனர். அதில், சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்த சுந்தரேசன் மகன் சதீஸ்குமார். இளையான்குடி அருகே சோதுகுடியை சேர்ந்த முத்துபாலு மகன் வடிவேல் பிரபு இருவரும், நேர்முக தேர்வில் பங்கேற்று, கூட்டுறவு துணை பதிவாளர் பணிக்கு தேர்வாகினர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த ஜெயராமன் மகன் பார்த்திபன், இத்தேர்வு எழுதி துணை கலெக்டர் பதவியை பெற்றுள்ளார். இவர்களை மையம் சார்பில் பாராட்டுகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி