மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
சிவகங்கை, : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் 2024--25ம் கல்வியாண்டிற்கு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 10 முதல் 15 வரை ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் சேர்க்கை நடைபெறவுள்ளது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் இரு சுழற்சிகளிலும் உள்ளன. வணிக மேலாண்மை, ஆங்கிலம், தாவரவியல் ஆகியவை முதல் சுழற்சியில் மட்டும் உள்ளன. இப்பாடப் பிரிவுகளுக்கு இணைய வழியாக 19 ஆயித்து 264 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 2844 விண்ணப்பங்கள் கூடுதல் ஆகும். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை மே 29, 30 தேதிகளில் நடந்தது.ஒற்றைச் சாளர முறையிலான முதல் கலந்தாய்வு ஜூன் 10 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் நீங்கலாக மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். 400 முதல் 290 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 10ம் தேதியும், 289 முதல் 250 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 11ம் தேதியும், 249 முதல் 215 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 12ம் தேதியும், 214க்கு கீழ் கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 13ம் தேதியும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். ஜூன் 15ம் தேதி தமிழில் சிறப்புத் தமிழ் பயின்ற அனைவரும் மற்றும் பகுதி- I தமிழில் 60 மதிப்பெண் வரை பெற்றவர்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண் வரை பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாவர்கள் காலை 9:00 மணிக்கு முன்பாகக் கல்லுாரிக்கு வர வேண்டும். காலதாமதமாக வருவோர் தரவரிசையிலான சேர்க்கை வாய்ப்பை இழக்கநேரிடும்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்களுடன், 5 புகைப்படங்களும் கொண்டு வர வேண்டும்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago