உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்து மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

முத்து மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

தேவகோட்டை : தேவகோட்டை காசுக்கடைவீதி முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஆக.5ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு ஹோமம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. ஆடி வெள்ளியன்று பெண்கள் விளக்கேற்றி அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்று நேற்று நிறைவு பெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. எட்டாம் நாளான நேற்று உலக நன்மைக்காக சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ