உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிய வீடுகளில் வெள்ளி திருட்டு 3 பேர் கைது

பூட்டிய வீடுகளில் வெள்ளி திருட்டு 3 பேர் கைது

திருக்கோஷ்டியூர்: கருங்குளத்தில் வெளியூரில் வசிக்கும் பெரி. நாச்சியப்பன் மற்றும் அ.வயிரவன் ஆகியோரின் பூட்டியிருந்த வீடுகளில் பிப்.22ல் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த பூஜைக்கான காமாட்சி விளக்கு உள்ளிட்ட 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. செல்வக்குமார் மற்றும் திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்தனர்.கைரேகை சோதனையில் கிடைத்த ரேகைப் பதிவுகளை ஒப்பிடும்போது பழைய குற்றவாளி ரேகைகளுடன் ஒத்துப்போனது.தொடர்ந்து திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன், எஸ்.எஸ்.ஐ.க்கள் வேல்முருகன், முத்துராஜன், கார்த்திக்பாபு ஆகியோர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.நேற்று அலவாக்கோட்டை விலக்கு ரோடு அருகில் டூவீலரில் வந்த 3 பேரை கைது செய்து, வெள்ளிக் கட்டியையும், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் செம்பனூரைச் சேர்ந்த செபஸ்டியான் மகன் சார்லஸ் என்ற சேசு அருள்36, திருப்புவனம் அகரம் சிலைமான் பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன்36, நாமக்கல், ரெட்டிரோடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் மாதேஸ்வரன்37 என்பதும், கருங்குளம் வீடுகளில் திருடியதும் தெரிந்தது.திருட்டு நடந்து ஒரு வாரத்திற்குள் திருடர்களை கைது செய்து 2 கிலோ வெள்ளி மீட்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ