மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை: மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதத்தில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.காரைக்குடி மீனாட்சிபுரம், போலீஸ் காலனி மேற்கு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சக்திவேல் 39, சிவகங்கை அருகே கோவானுார் பிள்ளையார்கோவில் தெரு ஜெயக்குமார் மகன் அலெக்ஸ் என்ற அழகுராஜா 24, சிவகங்கை அருகே பி.வேலாங்குளம் முத்துப்பாண்டி மகன் சிங்கமுத்து 20, பழனிக்குமார் மகன் சூர்யா என்ற வேல்பாண்டி 25, செல்வராஜ் மகன் சிவபாலமுருகன் 19, சிவகங்கை அருகே நாட்டாகுடி முருகேசன் மகன் சமயதுரை 22 ஆகிய 6 பேரையும் குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளை அவர்களிடம் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் வழங்கினர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago