உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்தனேந்தல் சர்வீஸ் ரோட்டில் செல்ல மறுக்கும் பஸ்களால் விபத்து

முத்தனேந்தல் சர்வீஸ் ரோட்டில் செல்ல மறுக்கும் பஸ்களால் விபத்து

மானாமதுரை : மானாமதுரை அருகே முத்தனேந்தல் நான்கு வழிச்சாலை ரோட்டில் ஆபத்தான முறையில் பயணிகள் பஸ்களில் ஏறி, இறங்குவதால் விபத்து அபாயம் உள்ளது.மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை அருகே மதுரை செல்லும் ரோட்டில் முத்தனேந்தல் கிராமம் உள்ளது.இங்கிருந்து தினமும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு முத்தனேந்தலில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட போது இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.இரு மார்க்கங்களிலும் செல்லும் பஸ்கள் சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் மெயின் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இரு புறங்களிலும் உள்ள சர்வீஸ் ரோட்டில் பஸ்கள் செல்லாததால் ஏராளமானோர் சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால் சிறிய வாகனங்கள் செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது.மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் நான்கு வழி சாலை ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக முத்தனேந்தல் சர்வீஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ரோடு வழியாக பஸ்கள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை