உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ஆடி திருவிழா; கஞ்சி கலயம் தயாரிப்பு மும்முரம்

மானாமதுரையில் ஆடி திருவிழா; கஞ்சி கலயம் தயாரிப்பு மும்முரம்

மானாமதுரை : ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கஞ்சி கலய திருவிழாவிற்காக மானாமதுரையில் மண் கலயம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் மண்ணாலான சமையல் பொருட்கள்,சுவாமி சிலைகள், விநாயகர் சிலைகள்,கொலு பொம்மைகள், சிறுவர்கள் விளையாட்டுப் பொருள்கள் ,கூஜாக்கள்,பானைகள், அடுப்புகள் கலைநயத்தோடும்,தரத்துடனும் தயாரிப்பதினால் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திண்டுக்கல், அருப்புக்கோட்டை இருக்கன்குடி, தாயமங்கலம் சமயபுரம்,மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆனி மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கஞ்சி கலய ஊர்வலங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இதற்காக மானாமதுரையில் மண்ணாலான கஞ்சிக்கலயங்கள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதோடு பல்வேறு ஊர்களுக்கும் கஞ்சி கலயங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, மானாமதுரையில் தயாரிக்கப்படும் கஞ்சி கலயங்கள் மிகுந்த தரத்துடனும்,கலை நயத்துடனும் இருப்பதினால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் நடைபெறும் கஞ்சி கலய ஊர்வலத்திற்காக மானாமதுரை வந்து கஞ்சி கலயங்களை மொத்தமாக வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ