உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அகில இந்திய மகளிர் கபடி ஹைதராபாத் ரயில்வே அணி வெற்றி

அகில இந்திய மகளிர் கபடி ஹைதராபாத் ரயில்வே அணி வெற்றி

திருப்புத்துார் : திருப்புத்துாரில் நடந்த அகில இந்திய கபடிப் போட்டியில் ைஹதராபாத் தென் மத்திய ரயில்வே அணி, ஹரியானா அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது.திருப்புத்துாரில் தி.மு.க., முப்பெரும் விழாவிற்காக அகில இந்திய மகளிர் கபடி போட்டி மூன்று நாட்கள் உள்ளரங்கில் நடந்தது. போட்டியில் தமிழகம் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக்' முறையில் நடந்த போட்டியில் தேர்வான 16 அணிகள் நாக் அவுட்' போட்டிக்கு தகுதி பெற்றன. அதில் தென் மத்திய ரயில்வே, கண்ணகிநகர்,சக்தி பிரதர்ஸ்- அந்தியூர்,வடக்கு ரயில்வே, ஹரியானா குருக்கல், டெல்லி பி.கே.ஆர்.கோபி, இமாசல பிரதேசம்ஆகிய எட்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதிப் போட்டியில் ைஹதராபாத் தென்மத்தியரயில்வே மற்றும் ஹரியானா குருக்கல் அணிகள்மோதின. போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட ஹரியானாவின் தேசிய வீராங்கனை பூஷா காயமடைந்ததால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ரயில்வே அணியின் பவித்ரா,சத்யபிரியா ஆகியோர் நன்றாக விளையாடியதால் 29:27 என்ற புள்ளிக் கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி கோப்பையை வென்றது. இரண்டாமிடத்தை ஹரியானா குருக்கல் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். போட்டிகளை தகவல் தொழில் நுட்ப நிர்வாகி காளிமுத்து ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை