மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள்
06-Dec-2024
நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே தென்கரையில் வி.சி.க.வினரால் அம்பேத்கரின் 68 ம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தென்கரையில் காரைக்குடி- அதிகரம் ரோடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருப்புத்துார் அண்ணாத்துரை சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்திற்கும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.திருப்புத்தூர் நகரச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாநில நில உரிமை மீட்பு இயக்க நிர்வாகி தளக்காவூர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, சிவதிருப்பதி, செல்லப்பாண்டி, ராமச்சந்திரன், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் அருள்தாஸ், மாநில இஸ்லாமிய ஜனநாயக பேரவை துணைச் செயலாளர் கமருதின், மாநில தத்துவரணி துணைச் செயலாளர் போஸ், மாவட்ட காட்சி ஊடக அமைப்பாளர் சாக்ய மணிவண்ணன், மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தலைவர் பொன்னுச்சாமி, மகளிரணி ஒன்றிய செயலாளர் விஜயா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024