உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்

ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்

காரைக்குடி : காரைக்குடிக்கு வந்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம், கூடுதல் பிளாட்பார்ம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழில் வணிகக் கழகத்தினர் தெரிவித்தனர்.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீவத்சவா நேற்று தனி ரயில் மூலம் வந்தார். அவரை தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி, இணைச்செயலாளர்கள் கந்தசாமி, சையது முன்னாள் பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றனர்.அவரிடம் அஜ்மீர் விரைவு ரயிலை காரைக்குடியில் நிறுத்த வேண்டும். ராமேஸ்வரம் ஹூப்ளி செகந்திராபாத் வாராந்திர ரயிலை நிரந்தரமாக்க வேண்டும். காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம் அமைத்திடவும் லிப்ட் வசதியை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை